7 வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 08 Apr, 2025
ஏப்ரல் 8,
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சுங்கை பெட்டாணி சாலையில் 7 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்ததாகவும் 5 வாகனங்கள் ஒரு இழுவை லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்ததாகவும் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு 12.40 மணிக்கு விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக அவர் தெரிவித்தார். 25வயது இளைஞர் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தியதால் பின்னிருந்து வந்த மற்ற 5 வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாகவும் விபத்தைத் தவிர்க்க முடியாத மோட்டார் சைக்கிள் இழுவை லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Tujuh kenderaan terlibat dalam kemalangan di Lebuhraya Utara-Selatan berhampiran Sungai Petani, menyebabkan seorang penunggang motosikal cedera. Lima kereta, sebuah lori treler dan sebuah motosikal rosak akibat pelanggaran berantai selepas seorang pemandu memberhentikan kenderaan di tengah jalan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *