RM 140,000 மதிப்பிலானக் கோழி இறைச்சிகளைக் கடத்திய மூவர் கைது!

top-news

ஏப்ரல் 10,


சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை மலேசியாவுக்குக் கடத்த முயன்ற 3 ஆடவர்களை எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவினர் கைது செய்தனர். நேற்று காலை Pasir Mas பகுதியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்திற்குரிய 2 வாகனங்களைச் சோதனையிட்டதாகவும் முறையான ஆவணங்கள் இல்லாத பெட்டிகளைப் பறிமுதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பறிமுதல் செய்யப்பட்ட 271 பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட நிலையில் பரிசோதிக்காத கோழி இறைச்சிகள் இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட மூவரும் 25 முதல் 39 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கோழி இறைச்சிகளின் மதிப்பு RM 140,000 என கணக்கிடப்பட்டுள்ளது.

Tiga lelaki berusia antara 25 hingga 39 tahun ditahan ketika cuba menyeludup 271 kotak ayam sejuk beku tanpa dokumen sah di Pasir Mas. Nilai rampasan dianggarkan RM140,000 dan kes disiasat oleh pasukan keselamatan sempadan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *