பி.கே.ஆர் தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றமா? - Datuk Fahmi Fadzil விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
பி.கே.ஆரின் தேசிய பொறுப்புகளுக்கானத் தேர்தலுக்குப் பின்னரே அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்கப்படும் என அரசு செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான Datuk Fahmi Fadzil தெரிவித்தார். அமைச்சரவை மாற்றம் என்பது பிரதமரின் முடிவு என்றும் அதில் அரசியல் கட்சியினர் தலையீடு இருக்காது என்றும் Datuk Fahmi Fadzil விளக்கமளித்துள்ளார். பி.கே.ஆரின் முக்கிய தலைவர்கள் தொகுதித் தேர்தல்களில் தோல்வி அடைந்திருந்தாலும் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் தொடர்வார்களா இல்லையா என்பது மே 24 பி.கே.ஆர் தேசிய தலைமைக்கானத் தேர்தலுக்கு முடிவெடுக்கப்படும் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
பி.கே.ஆர் தலைமைக்கானத் தேர்தலில் தொகுதி அளவில் தோல்வியைத் தழுவியர்களும் போட்டியிடலாம் என்றும், தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அமைச்சராகவோ துணை அமைச்சராகவோ இருக்க கூடாது என எந்தவொரு விதியுமில்லை என Datuk Fahmi Fadzil தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியின் தேர்தலால் அமைச்சரவையின் செயல்பாடுகள் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என Datuk Fahmi Fadzil வலியுறுத்தினார்.
Datuk Fahmi Fadzil menjelaskan bahawa sebarang perubahan dalam kabinet hanya akan dibincangkan selepas pemilihan kepimpinan PKR. Beliau menegaskan perubahan kabinet adalah kuasa Perdana Menteri dan tiada kaitan langsung dengan keputusan pemilihan parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *