கத்தியைக் காட்டி மிரட்டிய மனநோயாளி! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 20 Apr, 2025
ஏப்ரல் 20,
ஆடவர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டும்படியாகவும் துப்பாக்கியைக் கொண்டு பாதுகாவலர் ஒருவர் மிரட்டும்படியாகவும் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு பந்திங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தியைக் காட்டி மிரட்டியவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்வழியில் அவர் தப்பித்து உணவகத்திற்குள் நுழைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. நிலமையைக் கட்டுப்படுத்த முயன்ற பாதுகாவலர் துப்பாக்கியை ஆடவரை நோக்கி மிரட்டியதாகவும் தப்பிக்க முயன்ற ஆடவரைத் தடுப்பதற்காகத் தரையை நோக்கி சுட்டதாகவும் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
Pandangan awam digemparkan apabila seorang pesakit mental mengacukan pisau kepada orang ramai di sebuah restoran di Banting. Polis sedang menyiasat kejadian tersebut yang turut melibatkan seorang pengawal keselamatan melepaskan tembakan ke tanah untuk mengawal keadaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *