AYER KUNING இடைத்தேர்தலில் 1,114 காவல் அதிகாரிகள்!

- Sangeetha K Loganathan
- 11 Apr, 2025
ஏப்ரல் 11,
AYER KUNING சட்டமன்ற இடைத்தேர்தலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 1,114 காவல் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். நாளை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாப்பா மெர்டேக்கா பொதுமண்டபத்தில் 778 காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் ஏப்ரல் 26 இடைத்தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் மொத்தம் 1114 காவல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.
தேர்தலுக்கான 14 பிரச்சாரத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த 732 காவல் அதிகாரிகள் முழுநேரமாகப் பணியமர்த்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். எந்தவோர் அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் முழுமையானப் பாதுகாப்பை வழங்கவிருப்பதாகவும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த தரப்பினராக இருந்தாலும் உடனடியாகச் சம்பவ இடத்திலேயே கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப்படும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்.
Sebanyak 1,114 pegawai polis ditugaskan bagi memastikan keselamatan sepanjang proses Pilihan Raya Kecil DUN Ayer Kuning. Polis juga akan bertindak tegas terhadap mana-mana pihak yang mencetuskan kekacauan atau mengganggu ketenteraman awam sepanjang tempoh pilihan raya berlangsung.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *