நாளை தொடங்கும் பி.கே.ஆர் தேர்தல்! 296,403 உறுப்பினர்கள் வாக்களிப்பர்!

- Sangeetha K Loganathan
- 10 Apr, 2025
ஏப்ரல் 10,
மக்கள் நீதிக் கட்சியான PKR கட்சியின் கிளை தலைவர்களுக்காகத் தேர்தல் நாளை 11 ஏப்ரல் முதல் 20 ஏப்ரல் வரையில் கட்டம் கட்டமாக நடத்தப்படும் என பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் குழுத் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Dr Zaliha Mustafa அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடு முழுவதுமுள்ள 222 கிளைகளில் மொத்தம் 296,403 உறுப்பினர்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் 16,878 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார்.
222 கிளைகளில் 31 கிளைகளில் போட்டியின்றி தலைவர்களும் செயலவையினரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையும் Datuk Seri Dr Zaliha Mustafa உறுதிப்படுத்தினார். கட்சித் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை எளிதாக்கும் எண்ணத்தில் A.D.I.L. எனும் இயங்கலை மூலமாகவும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என Datuk Seri Dr Zaliha Mustafa இன்று தெரிவித்தார். பதிவு செய்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த இயங்கலை வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
PKR akan mengadakan pilihan raya parti bagi memilih pemimpin cawangan dari 11 hingga 20 April, melibatkan 296,403 ahli dan 16,878 calon. Undian boleh dilakukan melalui aplikasi A.D.I.L. bagi memudahkan proses pengundian, kata Dr Zaliha Mustafa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *