பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானப் பெண்ணிடம் லஞ்சம் கேட்ட போலிசார் கைது! – SPRM

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானப் பெண்ணிடமிருந்து RM 10,000 வரையில் லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் காவல் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். கோத்தா பாருவில் Inspektor பதவியில் உள்ள 30 வயது காவல் அதிகாரி நேற்று மாலை ஜெலியில் உள்ள ஓர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாகவும் இன்று Majistret நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை விசாரிப்பதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் 30 வயது காவல் அதிகாரி லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால அவர் கைது செய்யப்பட்டதாகக் கிளாந்தான் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Rosli Husain உறுதிப்படுத்தினார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளைக் காவல் துறையும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Seorang pegawai polis berpangkat Inspektor ditahan SPRM selepas didakwa meminta dan menerima rasuah sehingga RM10,000 daripada keluarga mangsa gangguan seksual. Pegawai berusia 30 tahun itu ditahan di Jeli dan dibawa ke Mahkamah Majistret untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *