போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 93 வாகனங்கள் பறிமுதல்! 4,611 சம்மன்கள்!

- Sangeetha K Loganathan
- 15 Apr, 2025
ஏப்ரல் 15,
போக்குவரத்து விதிகளை மீறியதற்காகக் கடந்த 24 மார்ச் முதல் ஏப்ரல் 8 வரையில் சுமார் 4,611 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 7335 வாகனங்களைச் சோதனையிட்டதில் 93 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு ஆணைய இயக்குநர் Hanif Yusabra Yusuf தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாதது, பாதுகாப்பு அம்சங்களைப் போடாதது, குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது, வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, சமிஞ்சை விளக்குகளைப் பின்பற்றாதது, கைப்பேசியைப் பயன்படுத்தியபடியே வாகனத்தைச் செலுத்துவது என பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் Methamphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநிலப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வு ஆணைய இயக்குநர் Hanif Yusabra Yusuf தெரிவித்தார்.
Sebanyak 4,611 saman dikeluarkan dan 93 kenderaan disita antara 24 Mac hingga 8 April di Negeri Sembilan kerana pelbagai kesalahan lalu lintas. Seorang individu turut ditahan kerana disyaki menggunakan dadah jenis Methamphetamine.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *