ஏப்ரல் 14 முதல் அப்-திவெட் பெர்டானாவிற்கான விண்ணப்பம் திறக்கப்பட்டிருக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 9-

இவ்வாண்டு ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கான முழு நேரத் தொழிற்கல்வி பெர்டானாவிற்கான விண்ணப்பம் வரும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும்.எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்த மாணவர்களும் தொழில்துறை தேவைக்கு ஏற்ற திறன் பயிற்சி துறைகளில் ஈடுபட ஆர்வம் கொண்டவர்களும் இந்த விண்ணப்பம் வாய்ப்பளிப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

உள்நாட்டுத் திறமைகளைக் கண்டறிவது உள்ளிட்ட, நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திவெட் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு வியூகத் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாகத் தேசிய திவெட் மன்றத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.

அப்-திவெட் என்பது நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் திவெட் பயிற்சிகளின் விண்ணப்பங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.இதனிடையே, இவ்வாண்டிற்கான திவெட் தினக் கொண்டாட்டம், வரும் ஜூன் 11 தொடங்கி 13ஆம் தேதி வரை, மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற திவெட் தேசிய மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் அத்தகவல்களைக் குறிப்பிட்டார்.

Permohonan kemasukan sepenuh masa ke TVET Perdana bagi Julai 2024 dibuka dari 14 April hingga 15 Jun. Pelajar lepasan SPM yang berminat dalam latihan kemahiran dialu-alukan memohon. Sambutan Hari TVET 2024 akan berlangsung di Melaka pada 11-13 Jun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *