பி.கே.ஆர் தேர்தலில் பிரபாகரன் தோல்வி!

top-news

ஏப்ரல் 20,

பி.கே.ஆர் கட்சியின் தொகுதித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் BATU நாடாளுமன்ற உறுப்பினர் P. Prabakaran தொகுதித் தலைவர் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தேர்தலில் நடப்புத் தொகுதித் தலைவரான P. Prabakaran 793 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட Asheeq Ali 946 வாக்குகள் பெற்று 153 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். 

Asheeq Ali கடந்த காலங்களில் பி.கே.ஆர் BATU தொகுதியின் முன்னாள் இளைஞர் பகுதி தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். 2015 முதல் நஜீப்பிற்கு எதிராகப் பி.கே.ஆர் இளைஞர் பகுதியினர் நடத்திய போராட்டத்தைத் தலைமை தாங்கியதும் Asheeq Ali என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வழக்கறிஞராக இருக்கும் Asheeq Ali மீண்டும் BATU தொகுதிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Ahli Parlimen Batu P. Prabakaran mengalami kekalahan mengejut dalam pemilihan ketua cabang PKR kepada Asheeq Ali, yang memperoleh 946 undi berbanding 793 undi Prabakaran. Asheeq pernah mengetuai sayap pemuda dan kini bertugas sebagai peguam.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *