டெங்கில் பள்ளிவாசல் நிலத்திலுள்ள தனியார் கோயில் இடிக்கப்படும்!

- Muthu Kumar
- 14 Apr, 2025
ஷா ஆலம். ஏப். 14-
சிலாங்கூரின் டெங்கிலில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு தனியார் கோயில் அங்கிருந்து அகற்றப்படாவிட்டால், சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதை இடித்து விடும் என்று, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியுள்ளார்.
உள்ளூர் முஸ்லிம் மக்களின் நலன்களுக்காக, அந்த தனியார் கோயில் அங்கிருந்து அகற்றப்படும் விவகாரத்தை விரைவாக தீர்க்குமாறு. மாநில அரசாங்கத்திற்கு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவை பிறப்பித்திருப்பதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் அல்லது மாநில சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்படாத அல்லது பதிவு பெறாத ஒரு தனியார் வழிபாட்டுத் தலமாக அக்கோயில் இருக்கிறது என்று அமிருடின் தெரிவித்தார்.
'ஆதலால், உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினரின் நன்மைக்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்நிலத்தில் அந்த தனியார் வழிபாட்டுத் தலம் சுட்டப்பட்டிருப்பது முறையற்றது என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
அக்கோயிலை அகற்ற அதன் உரிமையாளர் இணக்கம் தெரிவித்துள்ள வேளையில், இந்த விவகாரம் இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்பட்டு விடும் என்று, மாநில அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த விவகாரத்தில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், இன மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அமிருடின் கூறினார்.
டெங்கிலில் ஒரு பள்ளிவாசல் சுட்டப்பட விருக்கும் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கும் ஓர் இந்துக் கோயிலை அங்கிருந்து அகற்ற, சிப்பாங் நகராண்மைக் கழகத்துடன் சேர்ந்து தான் பணியாற்றப் போவதாக, சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா (ஜாய்ஸ்) கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தது.
ஒரு பள்ளிவாசலைக் கட்டுவதற்காக அந்நிலம் கடந்த 2011ஆம் ஆண்டில் அரசாங்கப் பதிவேட்டில் பதியப்பட்டிருந்ததாகவும், அவ்விலாகா இயக்குநர் ஷாசிஹான் அஹ்மாட் கூறியிருந்தார்.அந்த நிலத்தில் ஒரு பள்ளிவாசலைக் கட்டும் பணி வரும் 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
Sebuah kuil persendirian di Dengkil dibina secara haram di tanah diperuntukkan bagi masjid akan diroboh jika tidak dipindahkan, kata Menteri Besar Selangor. Arahan dikeluarkan demi kepentingan komuniti Muslim tempatan, selaras dengan titah Sultan Selangor.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *