பி.கே.ஆர் தேர்தலில் Rafizi Ramli தலைமையில் இரண்டாம் அணி உருவாகிறதா?

- Sangeetha K Loganathan
- 21 Apr, 2025
ஏப்ரல் 21,
பி.கே.ஆர் தொகுதித் தேர்தலில் பல முக்கிய தலைவர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் தோல்வி அடைந்த முக்கிய தலைவர்கள் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramli ஆதரவாளர் என்பதால் மீண்டும் பி.கே.ஆர் கட்சியில் இரண்டாம் அணி உருவாகவிருப்பதாக அரசியல் ஆய்வாளர் Dr Azmi Hassan தெரிவுத்துள்ளார். பி.கே.ஆர் கட்சியின் தலைமை பெறுப்புகளுக்கானத் தேர்தல் மே 24 நடைபெறவிருக்கும் நிலையில் பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவர் Datuk Seri Rafizi Ramli 222 பி.கே.ஆர் தொகுதிகளில் சில முக்கிய தொகுதிகளில் தனது ஆதரவாளர்களைப் போட்டியிட வைத்ததாகவும் பி.கே.ஆர் தலைமை பொறுப்பில் நீடிப்பதற்குத் தொகுதித் தலைவர்கள் முக்கியம் என்பதால் Datuk Seri Rafizi Ramli இதனைச் செய்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் Datuk Seri Rafizi Ramli க்கும் உள்துறை அமைச்சரான Saifuddin Nasution Ismailக்கும் பணிப்போர் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாகப். பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பிலிருந்த Saifuddin Nasution Ismail பி.கே.ஆர் துணைத் தலைவர் Datuk Seri Rafizi Ramliக்கு எதிராகப் போட்டியிடுவார் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் Datuk Seri Rafizi Ramli ஆதரவாளர்கள் தொகுதித் தேர்தல்களில் தோல்வி அடைந்திருப்பது பி.கே.ஆர் கட்சியில் Datuk Seri Rafizi Ramliயின் ஆளுமையும் பொறுப்பும் கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர் Dr Azmi Hassan தெரிவுத்துள்ளார்.
Terdapat kemungkinan wujudnya kumpulan kedua dalam PKR di bawah Datuk Seri Rafizi Ramli selepas kekalahan beberapa penyokongnya dalam pemilihan cabang. Pertembungan kuasa antara beliau dan Saifuddin Nasution turut dijangka berlaku.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *