லஞ்சம் பெற்றதாகக் குடிநுழைவுத் துறையின் 3 அதிகாரிகள் கைது!

top-news

ஏப்ரல் 15,

KLIA விமான நிலையத்தில் வெளிநாட்டினர்களை முறையாக ஆய்வு செய்யாமல் அனுமதித்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 குடிநுழைவுத் துறை அதிகாரிகளில் ஒருவர் 40 வயது மதிக்கத்தக்க பெண் அதிகாரி என தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட மூவர் மீது புகார் பெற்ற நிலையில் அவர்களைப் பின் தொடர்ந்து தனித்தனியாகக் கைது செய்ததாகவும் அவர்களின் வீட்டிலிருந்து நகைகளும் ரொக்கப் பணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் வரையில் லஞ்சம் பெற்று, விமான நிலையத்தில் வெளிநாட்டினர்களைச் சோதனையிடாமல் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட மூவரும் இதுவரையில் RM10 மில்லியனுக்கும் மேலாக லஞ்சம் பெற்றிருக்கலாம் என கணிக்கிடப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட மூவரும் ஏப்ரல் 21 வரையில் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiga pegawai Imigresen KLIA, termasuk seorang wanita, ditahan kerana disyaki menerima rasuah lebih RM10 juta sejak 2021. Mereka dipercayai membenarkan warga asing masuk tanpa pemeriksaan. Wang tunai dan barang kemas turut dirampas dari rumah mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *