ஏஐ நுண்ணறிவைப் பயன்படுத்தி மோசடி!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

கூலாய். ஏப்.10-

ஜொகூர் போலீஸ் தலைமையகம் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, 18 வயது உள்ளூர் பெண் ஒருவர் தனது முகத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள் சமூக ஊடகங்களில் பரவி, அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டதாக புகார் அளித்தார். என ஜொகூர் போலீஸ் தலைவர், டத்தோ எம்.குமார் இந்த தகவலை வெளியிட்டார்.

நேற்று முன்தினம் ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 5 மணியளவில், கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 16 வயது உள்ளூர் ஆண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கூலாய் பகுதியில் கைது செய்தனர். சந்தேகநபர், செயற்கை நுண்ணறிவு (ஏ) தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளில் இருந்து பெறப்பட்ட படங்களைத் திருத்தி, அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, ஒவ்வொரு படத்தையும் வெ.2.00க்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக அறியப்படுகிறது.

சந்தேகநபர், ஏப்ரல் 9 முதல் 12 வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றவியல் சட்டம் பிரிவு 292 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. குற்றவியல் சட்டம் பிரிவு 292இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் பிரிவு 233இன் கீழ், வெ.50,000 வரை அபராதம் அல்லது ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

மேலும், ஜொகூர் போலீஸ் தலைமையகம் இதே சந்தேகநபருடன் தொடர்புடைய மேலும் எட்டு புகார்களைப் பெற்றுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள். அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்கவும். போலீஸ் விசாரணையை பாதிக்கக்கூடிய ஊகங்களை முன்வைக்காதிருக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி, இன்ஸ்பெக்டர் நுருல் ஹுடா பிந்தி ஷொஹோடினை 013-5382698 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இதனிடையே கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தகவல் தொடர்பு துணை அமைச்சர், தியோ நீ சிங், மார்ச் 27. 2025 அன்று, பூன் யூ உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தொடர்பு கொண்டதாகவும், பலர் "பூன் யூ" என்ற பெயரில் சமூக ஊடகக் குழுக்களில் ஆபாச படங்கள் பரப்பப்பட்டதாகவும் அவரின் முக நூல் அகபக்கத்தில் நேற்று பதிவு செய்துள்ளார்.

அதில் இந்த வழக்கில் 30 முதல் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்களில் சிலர் 14 வயது மாணவர்களாக இருக்கலாம். தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம்  போலீசுடன் இணைந்து விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. தியோ நீ சிங், பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்தும் இந்த செயல்கள் அவர்களின் தவறல்ல, எனவே தாமே குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
மேலும், ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் சமூகத்தை, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தாமல் கவனமாக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

Seorang remaja lelaki 16 tahun ditahan di Kulai kerana disyaki menggunakan teknologi AI menghasilkan dan menjual gambar lucah palsu wanita secara dalam talian. Kes disiasat di bawah Seksyen 292 Kanun Keseksaan dan Seksyen 233 Akta Komunikasi dan Multimedia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *