RM313.82 மில்லியன் வரி! TUN DAIM மனைவி நயிமா மேல்முறையீடு!

- Sangeetha K Loganathan
- 23 Apr, 2025
ஏப்ரல் 23,
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் Tun Daim Zainuddin வருமான வரி நிலுவையிலிருந்த தொகைக்கு வருமான வரி துறையான LHDN விளக்கமளிக்க வேண்டும் என Tun Daim Zainuddinமின் மனைவி Toh Puan Na'imah Abdul Khalid இன்று நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 18 இல் Tun Daim Zainuddin மொத்தம் RM313.82 மில்லியன் ரிங்கிட் வரியைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாகவும் விரைந்து வரியைச் செலுத்தும்படியும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் Tun Daim Zainuddin இறப்புக்குப் பின் அவரின் சொத்துகளுக்குப் பாதுகாவலரான Toh Puan Na'imah Abdul Khalid வரியைச் செலுத்த வேண்டும் என வருமான வரி துறையான LHDN நோட்டிஸ் அளித்திருந்த நிலையில் வரி தொகைக்கான முழுமையான விளக்கத்தை LHDN வழங்க வேண்டும் என Toh Puan Na'imah Abdul Khalid மேல்முறையீடு செய்துள்ளார்.
Toh Puan Na'imah Abdul Khalid மேல்முறையீட்டு இன்று நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில் தற்காலிகமாக அவர் மீதான வருமான வரி தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்வதாகவும் மேல்முறையீட்டின் விசாரணைக்குப் பின்னர் வருமான வரி துறையின் நோட்டிஸ் செல்லுப்படியாகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக Toh Puan Na'imah Abdul Khalid மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணையில் நேரில் ஆஜராகும்படியும் வருமான வரி துறை சம்மந்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
Toh Puan Na'imah Abdul Khalid, isteri kepada arwah Tun Daim Zainuddin, memfailkan rayuan terhadap tuntutan cukai pendapatan RM313.82 juta oleh LHDN. Beliau meminta penjelasan penuh berhubung jumlah cukai itu selepas diberi notis untuk melunaskannya sebagai pemegang amanah harta.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *