மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 9-

மருத்துவமனைக்கு முந்தைய பராமரிப்புச் சட்ட மசோதா அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவசரக்கால நடைமுறைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக, Good Samaritan Law கருத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தை சுகாதார அமைச்சின் மருத்துவ மேம்பாட்டுப் பிரிவும் சட்ட விவகாரப் பிரிவும் வரைந்து வருகிறது.

திடீர் மாரடைப்பு அல்லது நுரையீரல் செயல்பாட்டின் திடீர் நிறுத்தத்தை மீண்டும் துடிக்க வைப்பதற்கான சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை போன்ற அவசரக்கால சூழ்நிலைகளில் உதவும் பொதுமக்களைப் பாதுகாக்க இச்சட்டம் அவசியமானது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

"சமாரித்தான் சட்டத்தின் இயற்றல் என்பது ஏஇடி கண்ணோட்டத்தில் மட்டுமல்ல, பிற விஷயங்களையும் அது பாதுகாக்கக்கூடும். உதாரணமாக, நீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்ற விரும்பும் சூழ்நிலையில், சில நேரங்களில் சில காயங்களும் விபத்துகளும்
ஏற்படும். அவை முற்றிலும் தற்செயலாக நிகழும். அதனால் தான் இந்த சமாரித்தான் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசப்படுகிறது.வளர்ச்சி கண்ட நாடுகளில் அச்சட்டம் இருக்கிறது. என்று அவர் கூறினார்.

சி.பி.ஆர் குறித்த திறனை வளர்ப்பதற்கும், மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் ஏ.இ.டி சிகிச்சைக்கான இயந்திர பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும் இந்த அணுகுமுறைக்கு நாடு தழுவிய கூட்டு உறுதிப்பாடு அவசியம் என்றும் அவர் கூறினார்.இதில் அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அரசு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமூகம் ஆகியவை உட்படுத்தப்பட்டு இருப்பதையும் டாக்டர் சுல்கிப்ளி சுட்டிக்காட்டினார்.

“பின்பற்றவில்லை என்றால்,நாங்கள் ஓர் எச்சரிக்கை அறிவிக்கை அல்லது எச்சரிக்கையை வெளியிடுவோம். எனவே அக்டோபர் முதலாம் தேதி வரை சிறிது அவகாசம் வழங்குகிறோம். கட்டுப்பாடுகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், எச்சரிக்கை அறிவிப்பு அல்லது எச்சரிக்கையை வெளியிடுவதன் மூலம் 2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி வரை அனுமதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று அவர் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு அக்டோபர் முதலாம் தேதி முதல், 2024ஆம் ஆண்டு பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள்களின் கட்டுப்பாட்டுச் சட்டம், சட்டம் 852 மற்றும் அதன் கீழ் உள்ள தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதற்கு ஏற்ப, இத்தடை செயல்படுத்தப்படுகிறது.

Satu rang undang-undang penjagaan pra-hospital dijangka dibentang di Parlimen awal 2025. Berdasarkan “Good Samaritan Law”, ia bertujuan lindungi orang awam beri bantuan kecemasan seperti CPR. Kerjasama merentas sektor penting untuk jayakan inisiatif ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *