‘துருன் அன்வார்’ 3 லட்சம் பேர் திரள்கிறார்களா? KL காவல்துறை தலைவர் விளக்கம்!

- Shan Siva
- 18 Jul, 2025
‘துருன் அன்வார்’ 3 லட்சம் பேர் திரள்கிறார்களா?
KL காவல்துறை தலைவர் விளக்கம்!
கோலாலம்பூர்:
அடுத்த வாரம் தலைநகரில் நடைபெறும் “துருன் அன்வார்” பேரணியில் கலந்து கொள்ளத்
திட்டமிடுபவர்கள் அமைதியான முறையில் திட்டமிடவும், எந்தவிதமான ஆத்திரமூட்டும் செயல்களையும் தவிர்க்கவும் கோலாலம்பூர் காவல்துறைத்
தலைவர் உசுப் ஜான் முகமது வலியுறுத்தியுள்ளார்.
அமைதியாக
ஒன்றுகூடி, உங்கள்
நடத்தையைக் கவனியுங்கள், விரும்பத்தகாத
சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு தூண்டுதல் அல்லது செயல்களையும் தவிர்க்க
வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எதையும்
எரிக்காதீர்கள்,” என்று அவர் இன்று
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
ஜூலை 26 அன்று பெரிகாத்தான் நேஷனல் நடத்தவிருக்கும்
இந்தப் போராட்டம், பிரதமர் அன்வார்
இப்ராஹிமின் ராஜினாமாவை வலியுறுத்தும் ஒரு வெகுஜன பேரணியாகக் கருதப்படுகிறது.
இந்த மாத
தொடக்கத்தில் ஷா ஆலமில் இதேபோன்ற போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதிலும், 26 ஆம் தேதி
300,000 பேர் வரை பங்கேற்பார்கள்
என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்!
டத்தாரான்
மெர்டேகாவைச் சுற்றி போராட்டம் நடத்துவதற்கான திட்டங்கள் குறித்து காவல்துறை
அறிந்திருந்ததாக உசுப் கூறினார்.
சோகோவிலிருந்து டத்தாரான்
மெர்டேகா வரை அவர்கள் கூடத் திட்டமிடும் பகுதியில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என அவர் கூறினார்!
பேரணியில்
கலந்துகொள்பவர்கள் காலை 11 மணியளவில்
ஒன்றுகூடத் தொடங்கி, பின்னர் பிற்பகல்
2 மணியளவில் டத்தாரான்
மெர்டேக்காவிற்கு அணிவகுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாள் முழுவதும்
பொது ஒழுங்கைப் பராமரிக்க 2,000 க்கும் மேற்பட்ட
காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று உசுப் கூறினார்.
தற்போது சாலை மூடல்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும், ஆனால் சூழ்நிலைகளைப் பொறுத்து செயல்படுத்தப்படலாம் என்றும் உசுப் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *