நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி!

- Sangeetha K Loganathan
- 07 Apr, 2025
ஏப்ரல் 7,
நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று மாலை 4.10 மணிக்குச் சம்பவம் குறித்து அவசர அழைப்புப் பெற்றதாகப் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Salahuddin Isa தெரிவித்தார். உயிரிழந்தவர் 18 வயது Shahrul Ikwan Adam Hareez என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாலை 4 மணியளவில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருக்கும் போது அவர் மட்டும் தனியாக நீர்வீழ்ச்சியின் உச்சியிலிருந்து புகைப்படம் எடுத்ததாகவும், புகைப்படம் எடுக்கும் போது சம்மந்தப்பட்ட இளைஞர் தவறி விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் 3 மீட்டர் ஆழமுள்ள நீர் பகுதியில் அவர் சிக்கியதாகவும் சுமார் 5.40 மணிக்கு அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பகாங் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Salahuddin Isa தெரிவித்தார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப்பரிசோதனைக்காக ரவூப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang remaja lelaki berusia 18 tahun maut selepas terjatuh dari puncak air terjun ketika mengambil gambar bersama rakan-rakannya di Pahang. Mangsa dikenali sebagai Shahrul Ikwan Adam Hareez dan mayatnya ditemui sekitar jam 5.40 petang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *