மின்கம்பத்தை மோதி இளைஞர் பலி!

top-news

ஏப்ரல் 20,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரமிருந்த மின்கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றிரவு 11 மணிக்கு கோத்தா திங்கியில் உள்ள BANDAR MAS சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் YUSOF OTHMAN தெரிவித்தார். 

விபத்துக்கானக் காரணத்தைக் காவல் அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தியது விபத்திற்கான முதன்மை காரணம் என கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் YUSOF OTHMAN தெரிவித்தார். உயிரிழந்த 16 வயது இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக KOTA TINGGI மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang remaja lelaki berusia 16 tahun maut selepas motosikal yang ditunggangnya merempuh tiang elektrik di Kota Tinggi. Kejadian berlaku di Bandar Mas akibat kehilangan kawalan dan dipercayai berpunca daripada kelajuan tinggi, menurut polis daerah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *