பள்ளிகளில் பண்டிகைக் கொண்டாட்டம் வழிகாட்டிகளை வெளியிடுமாறு என்யூடிபி கோரிக்கை!

- Muthu Kumar
- 18 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 18-
பள்ளிகளில் குறிப்பாக, பெரிய அளவில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளை வெளியிடுமாறு, கல்வி அமைச்சை தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் (என்யூடிபீ) வலியுறுத்தி இருக்கிறது.
சில பள்ளிகள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை பெரிய அளவில் நடத்தி
வருகின்றன. அதில் கலந்து கொள்ளுமாறு மாநில கல்வி இலாகாக்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட அருகில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளும் அழைக்கப்பட்டு வருவதாக. என்யூடிபி தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்தார்.
"அத்தகைய கொண்டாட்டங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டாலும், தங்களின் தொழில் சார்ந்த பணியுடன் தொடர்பு இல்லாத காரணத்தினால், ஆசிரியர்களுக்கு அவை கூடுதல் சுமையை ஏற்படுத்தப்படுவதை மறுக்க முடியாது. 'அதோடு, அத்தகைய நிகழ்ச்சிகள் ஒற்றுமைக்கு வழியை ஏற்படுத்தித் தந்தாலும், பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் ஆசிரியர்கள் மீது சுமையை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விடும்
என்று அமினுடின் தெரிவித்தார்.
மாநில கல்வி இலாகா, மாவட்ட கல்வி அலுவலகம் அல்லது இதர பள்ளிகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளாமல், அத்தகைய கொண்டாட்டங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக, பள்ளிகளில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது குறித்து அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளை வெளியிடுமாறு. கல்வி அமைச்சுக்கு ஒரு கல்விமான் கோரிக்கை விடுத்திருப்பதாக, எஃப்எம்டி இதற்கு முன்னர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
பெரிய அளவிலான கொண்டாட்டங்கள். மாணவர்களுக்குப் போதிப்பதில் கவனம் செலுத்துவதில் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கருதும் சில ஆசிரியர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்ட பிறகு, மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அனுவார் அஹ்மாட் இந்த விவகாரத்தை எழுப்பி இருந்தார்.
பள்ளிகளில் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியைச் சேர்ந்தவர்களுக்குச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்று. கல்வி அமைச்சு அதற்கு பதிலளித்திருந்தது.
Kesatuan Perkhidmatan Perguruan Kebangsaan (NUTP) menggesa Kementerian Pendidikan mengeluarkan garis panduan rasmi mengenai sambutan perayaan besar di sekolah. Ini bagi mengelak beban tugas tambahan kepada guru serta gangguan terhadap fokus pengajaran dan pembelajaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *