SCAM! RM30,200 ரிங்கிட்டை இழந்த பெண்!

- Sangeetha K Loganathan
- 17 Apr, 2025
ஏப்ரல் 17,
பகுதி நேர வேலை வழங்கப்படுவதாகவும் முன்பணம் செலுத்தினால் பகுதி நேர வேலையில் கிடைக்கபெறும் லாபத்தில் பங்கு தரப்படும் என ஆசை வார்த்தைகளை நம்பி RM30,200 ரிங்கிட்டை 39 வயது பெண் இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட 39 வயது பெண் கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி அடையாளம் தெரியாத நபர் புலனக் குழுவில் இணைத்தும் பகுதி நேர வேலை வாய்ப்புக்கான விளம்பரத்தால் ஈர்க்கட்டு RM30,200 ரிங்கிட்டை முதலீடு செய்ததாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
முதலீடு செய்த பணத்தின் மூலம் பெறப்பட்ட லாபப் பணத்தைப் பெற முயற்சி செய்த போது மேற்கொண்டு பணத்தைச் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் முடியாது என சம்மந்தப்பட்ட 39 வயது பெண் மறுத்த நிலையில் முதலீடு செய்த பணமும் லாபப் பணமும் மொத்தமாக வலைத்தலத்திலிருந்து காலியானதாகப் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட 39 வயது பெண் பணத்தைச் செலுத்திய வங்கி கணக்குகளைக் காவல்துறையினர் மறு ஆய்வு செய்து வருவதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
Seorang wanita berusia 39 tahun kerugian RM30,200 selepas terpedaya dengan iklan kerja sambilan palsu yang menjanjikan pulangan lumayan. Polis sedang menyiasat akaun bank yang terlibat dalam kes penipuan ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *