RM375,000 மதிப்பிலானப் பன்றி இறைச்சிகளைக் கடத்திய ஆடவர் கைது!

top-news

மார்ச் 10,

ஜொகூரில் கால்நடை சேவை ஆணையம் JPV மேற்கொண்ட சோதனையில் 90 பன்றி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11.10 மணிக்குச் சந்தேகத்திற்குரிய லாரியைச் சோதனையிட்டதில் சம்மந்தப்பட்ட பன்றி இறைச்சிகள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சிகளைக் கடத்தியதாக நம்பப்படும் 33 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பன்றி இறைச்சிகளின் மதிப்பு RM375,000 என கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பன்றி இறைச்சிகளின் நிறுவனத்தின் முத்திரைகளும் போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Polis Johor merampas 90 keratan karkas babi dipercayai diseludup dari negara jiran dalam serbuan Op Beku di Skudai. Seorang lelaki ditahan kerana gagal mengemukakan dokumen sah. Kes diserahkan kepada JPV Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *