பொழுதுபோக்கு மையத்தில் 31 வெளிநாட்டுப் பெண்களும் 38 மலேசியர்களும் கைது!

- Sangeetha K Loganathan
- 16 Apr, 2025
ஏப்ரல் 16,
இன்று அதிகாலை தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாத 31 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். Jalan Klang Lama பகுதியில் உள்ள 2 வெவ்வேறு பொழுதுபோக்கு மையம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 31 வெளிநாட்டினர்களின் 26 பேர் வெளிநாட்டுப் பெண்கள் என்றும் பொழுதுபோக்கு மையத்தில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். பொழுதுபோக்கு மையத்திலிருந்த 38 மலேசியர்களும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் 23 முதல் 35 வயதுக்குற்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Seramai 31 wanita warga asing dan 38 rakyat Malaysia ditahan dalam serbuan di dua pusat hiburan di Jalan Klang Lama kerana tiada dokumen sah dan disyaki terlibat dalam aktiviti tidak bermoral, menurut Jabatan Imigresen Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *