MRSM கல்லூரியில் பகடிவதையா? விசாரிக்கிறோம்!

top-news

ஏப்ரல் 7,

தேசிய ஆரம்ப அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே பகடிவதை செய்யப்படும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாக மாரா ஆணையம் விசாரணையை மேற்கொள்ளவிருப்பதாக மாரா ஆணையத்தின் தலைவர் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். சம்மந்தப்பட்ட காணொலியின் உண்மை தன்மையை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். 

மாரா கல்லூரியின் தங்கும் விடுதியில் உள்ள ஓர் அறையில் மாணவர்கள் சிலர் ஒரு மாணவரை உதைத்து துன்புறுத்தும்படியாகவும் தலையணையால் முகத்தை மூடி தாக்கும்படியானக் காணொலி பரவியதாகத் தாம் அறிந்ததும் நிர்வாகிகளிடம் விசாரணையை மேற்கொள்ளும்படி அறிவுருத்தியதாகவும் காணொலியில் இருப்பது உண்மை எனில் பகடிவதையில் சம்மந்தப்பட்ட மாணவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் Datuk Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

Satu video memaparkan insiden buli di asrama MRSM tular di media sosial. MARA kini menjalankan siasatan melalui jawatankuasa khas. Jika video itu didapati sahih, tindakan tegas akan diambil terhadap pelajar yang terlibat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *