பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகச் சீனா! அன்வார் நன்றி!

top-news

ஏப்ரல் 17,

காசாவில் தற்போது நிலவும் போர் நிறுத்தம் குறித்தான முடிவுகளுக்குச் சீனா முழுமையாக ஆதரவு வழங்கும் என சீனா அதிபர் Xi Jinping நம்பிக்கை அளித்துள்ளதாக அன்வார் தெரிவித்தார். உலகின் பலமிக்க நாடு பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதற்குத் தம்மால் இயன்றதைத் தாம் செய்ததாகவும் நியாயத்தை உணர்ந்த Xi Jinping பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனுக்கிடையிலானப் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என Xi Jinping கேட்டுக்கொண்டார். காசாவில் நிலவும் போர் நிறுத்தம் தற்காலிகமானது என்றாலும் பாலஸ்தீனியர்களுக்கானச் சுதந்திரத்தைச் சீனா ஆதரிக்க விரும்புவதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim menyatakan penghargaan kepada Presiden China, Xi Jinping atas sokongan penuh terhadap Palestin dan usaha ke arah gencatan senjata di Gaza. China menegaskan sokongan kepada kebebasan Palestin dan gesa tindakan PBB.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *