Songkran கொண்டாட்டத்தில் கைகலப்பு! காவல்துறை விசாரணை!

- Sangeetha K Loganathan
- 22 Apr, 2025
ஏப்ரல் 22,
சிலாங்கூரில் உள்ள பிரபல வணிகத் தலத்தில் Songkran கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் ஈடுபட்ட கும்பலைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக Petaling Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja’afar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட கும்பலைக் காவல்துறை தேடி வருவதாக அவர் தெரிவித்தார்.
டாமான்சாராவில் உள்ள வணிகத்தலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று Songkran கொண்டாட்டத்தை நடத்திய போது இரு கும்பலுக்குமிடையில் இந்த கைகலப்பு ஏற்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட வணிகத்தலத்திற்குச் சொந்தமானப் பொருள்கள் மிகுந்த சேதத்திற்குள்ளானதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Petaling Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja’afar தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் இது வரை காவல்நிலையத்தில் எந்தவொரு புகாரும் அளிக்காத நிலையில் டாமான்சரா காவல் நிலைய அதிகாரிகளால் கைகலப்பு குறித்தான விசாரணை நடத்தப்படும் என Petaling Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Shahrulnizam Ja’afar தெரிவித்தார்.
Selangor polis mengenal pasti kumpulan terlibat dalam pergaduhan semasa sambutan Songkran di Damansara. Pergaduhan menyebabkan kerosakan harta benda. Tiada laporan dibuat setakat ini, namun siasatan sedang dijalankan oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *