தொழிலாளர் சட்டத்தை மீறிய 2 நிறுவனங்களுக்கு மொத்தம் RM 77,000 அபராதம்!

- Sangeetha K Loganathan
- 12 Apr, 2025
ஏப்ரல் 12,
பினாங்கில் அமைந்துள்ள இரு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான முறையானப் பாதுகாப்பை வழங்காமல் செயல்பட்டதாகப் பெறப்பட்ட புகாரின் ஆடிப்படையில் சம்மந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் பினாங்கு தொழில் பாதுகாப்பு சுகாதாரத் துறையான JKKP அபராதம் விதித்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னர் பினாங்கு Sesyen நீதிமன்ற இந்த அபராதத்தை விதித்துள்ளது.
பட்டர்வெர்த்தில் இயங்கி வந்த எரிவாயு நிலையத்திற்கு RM22,000 அபராதமும் உற்பத்தி நிறுவனத்திற்கு RM55,000 அபராதமும் விதித்து Butterworth Sesyen நீதிமன்ற நீதிபதி Nor Azah Kasran தீர்ப்பளித்தார். உற்பத்தி நிறுவனத்தில் பாதுகாப்பற்ற நிலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dua syarikat didenda oleh Mahkamah Sesyen Butterworth kerana melanggar Akta Keselamatan dan Kesihatan Pekerjaan 1994. Syarikat stesen minyak didenda RM22,000, manakala syarikat pembuatan dikenakan denda RM55,000 selepas pekerjanya cedera dalam insiden jentera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *