மலாய்க்காரர்களின் நிலத்தை அபகரிக்கும் அரசாங்கம்!

top-news

ஏப்ரல் 10,

மலாய்க்காரர்களுக்கானப் பூமிப்புத்ரா நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் Datuk Seri Hamzah Zainudin இன்று குற்றம்சாட்டினார். மேம்பாட்டுக்காக அரசாங்கம் கையகப்படுத்தும் நிலங்களில் பெரும்பான்மையானவை MALAY RESERVE நிலங்கள் என Datuk Seri Hamzah Zainudin இன்று தெரிவித்தார். மலேசியாவிலேயே மலாய்க்காரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என அவர் தெரிவித்தார். 

குறிப்பாகத் தலைநகரில் உள்ள Kampung Sungai Baru நிலங்களை மேம்பாட்டுக்காக அங்கிருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியை அரசாங்கம் தொடங்கியிருப்பதாகவும் Kampung Sungai Baru நிலம் கடந்த 1960 ஆம் ஆண்டு MALAY RESERVE நிலமாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். Kampung Sungai Baru பகுதியில் 90% மலாய்க்காரர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் மாற்று நிலங்களை அரசாங்கம் வழங்குவதாகவும் தெரிவிப்பது MALAY RESERVE நிலங்களை அபகரிக்கும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது என Datuk Seri Hamzah Zainudin குறிப்பிட்டார்.

Datuk Seri Hamzah Zainudin menuduh kerajaan merampas tanah rizab Melayu termasuk di Kampung Sungai Baru atas nama pembangunan. Beliau mendakwa ini mencabuli hak bumiputera dan usaha kerajaan menggantikan tanah dianggap sebagai cubaan merampas tanah Melayu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *