கள்ளத்தனமாக மலேசியாவுக்குள் நுழைந்த சீனா நாட்டு ஆடவர் கைது!

- Sangeetha K Loganathan
- 12 Apr, 2025
ஏப்ரல் 12,
சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைந்த சீனா நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் எல்லை பாதுகாப்பு இராணுப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் Sungai Golok பகுதியில் 38 வயதான அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்த ராணுவ அதிகாரிகள் இரவு 10.30 மணிக்கு அந்நபரைக் கண்டதாகவும் தாய்லாந்து மலேசியா எல்லையைக் கடக்க RM 13,900 பணத்தைக் கட்டணமாகச் செலுத்தியதாவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த 38 வயது ஆடவரை TANAH MERAH மாவட்டக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
Tentera Darat Malaysia menahan seorang lelaki warga China berusia 38 tahun yang memasuki Malaysia secara haram melalui Sungai Golok di sempadan Malaysia-Thailand. Suspek dipercayai membayar ejen untuk peluang pekerjaan dan diserahkan kepada IPD Tanah Merah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *