104 கிலோ போதைப்பொருளுடன் மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 11 Apr, 2025
ஏப்ரல் 11,
கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 104 கிலோ எடையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் DATO RUSDI MOHD ISA தெரிவித்தார். கோலாலம்பூர் KUCAI LAMA சாலையில் அமைந்துள்ள ஒரு தங்கும் விடுதியில் இரவு 11.40 மணிக்கு இச்சோதனையை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். இச்சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருருடன் சம்மந்தப்பட்ட தங்கும்விடுதியில் இருந்த 3 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக DATO RUSDI MOHD ISA தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரும் 33 முதல் 44 வயது போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காகக் காவல்துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக DATO RUSDI MOHD ISA தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் கோலாலம்பூரில் இந்த கும்பல் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையும் அல்லது 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம் என DATO RUSDI MOHD ISA தெரிவித்தார்.
Kuala Lumpur polis menahan tiga lelaki tempatan di sebuah rumah tumpangan di Jalan Kuchai Lama dan merampas 104kg dadah. Ketiga-tiganya berusia 33 hingga 44 tahun dan disiasat di bawah kes pengedaran dadah yang membawa hukuman berat
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *