பிற சமயத்தவரை உங்கள் சமய அமைப்புக்கு தலைவராக்குவது பெருத்த அவமானம்!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைமை பொறுப்புக்கு பிற சமயத்தவரை உங்கள் சமய அறவாரியத்தின் தலைவராக முன்மொழிவதோ அல்லது ஏற்பதோ என்பது தங்களின் சமயத்தை ஏற்றுக் கொண்ட ஒட்டுமொத்த இனத்திற்குமே பெருத்த அவமானம் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில் பாலமுருகன் வீராசாமி, ஆனந்த தமிழன் முனியாண்டி ஆகியோர் தமது கூட்டறிக்கையில் தெரிவித்துக் கொண்டனர்.

தற்போது மலேசிய அரசியல் வரலாற்றில் படிப்படியாக தமது உரிமையும் நிகராளித்துவத்தையும் இழந்து வரும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஒரு இழப்பாகவே இது பார்க்கப்படுகிறது.அந்தந்த சமயத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான் அவரவர் சமய அமைப்பு, குழுவுக்கு தலைவராக அல்லது நிகராளியாக இருக்க வேண்டும் என்பதே இயல்பு.

மாறாக மற்றவரைக் கொண்டு வந்து நிறுத்துவது அந்த சமயத்தின் இயலாமையை காட்டுவதாகும். மேலும் இது தங்கள் சமூகத்தின் தன்னம்பிக்கையை கேள்விக்குறியாக்கி விடும் என்றனர்.

Pelantikan individu bukan Hindu sebagai ketua Penang Hindu Endowment Board dikritik oleh organisasi Hindu yang menganggapnya sebagai penghinaan kepada komuniti Hindu. Mereka menegaskan hanya penganut agama tersebut wajar memimpin institusi keagamaan masing-masing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *