தம்புனில் புயல்: வீடுகள் சேதம்-மரங்கள் சாய்ந்தன!

- Muthu Kumar
- 16 Apr, 2025
ஈப்போ, ஏப்.16-
தாமான் தம்புனில் புயல் காற்று வீசியதில் சில வீடுகள் சேதமுற்றன. கடந்த திங்கள்கிழமை மாலை நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சில மரங்கள் சாய்ந்த சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டதாக கிந்தா மாவட்ட பொதுத் தற்காப்புப் படையின் நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.
புயல்காற்றினால் தங்களின் வீட்டுக் கூரைகள் பறந்தது தொடர்பில் மாலை 6.44 மணிக்குப் பொதுமக்களிட்டமிருந்து புகார்
கிடைத்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பொதுத் தற்காப்புப் படையின் அதிகாரி, படையினர் குழு அனுப்பப்பட்டதில் கண்காணிப்பு மற்றும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டன.
நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கச் சாலையைத் தடுக்கும் கட்டைகளை வெட்டுவதில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஓர் அறிக்கையில் அம்மையம் குறிப்பிட்டது.
Taman Tambun, Ipoh dilanda ribut menyebabkan beberapa bumbung rumah rosak dan pokok tumbang. Pasukan pertahanan awam segera bertindak membersih kawasan dan memotong halangan di jalan. Aduan diterima jam 6.44 petang, Isnin lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *