Raub நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலக வேண்டும்! பாஸ் கட்சி வலியுறுத்து!

top-news

ஏப்ரல் 14,

ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட அரசு நிலங்களை மீட்க வந்த அரசு அதிகாரிகளைத் தடுத்த Raub நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui பதவி விலக வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். நில ஆக்கிரமிப்புச் செய்தவர்களுக்கு ஆதரவாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவது அரசியல் தலைவருக்கு உகந்த செயல் இல்லை என்றும் டி.ஏ.பி கட்சியினர் பெரும்பாலும் சட்டத்தை மதிப்பதில்லை என Tuan Ibrahim Tuan Man சாடினார். 

அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுப்பது ஒரு குற்றச் செயல் என்பதைக் கூட தெரியாத அளவிற்கு டி.ஏ.பி தலைவர்கள் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்களை மாநில அரசு விரைந்து கைது செய்யும்படி Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார். 200 டுரியான் மரங்களுக்காகச் சட்டத்தை மீறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என Tuan Ibrahim Tuan Man எச்சரிக்கை விடுத்தார்.

Timbalan Presiden PAS, Tuan Ibrahim Tuan Man menggesa Ahli Parlimen Raub, Chow Yu Hui meletak jawatan jika enggan patuhi dasar kerajaan, susulan tindakannya menghalang operasi penguatkuasaan terhadap pekebun durian haram yang diputuskan melalui mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *