ஆசியான் உச்சநிலை மாநாடு; சுமுகமான போக்குவரத்திற்கு இல்லிருப்பு கற்றல் முறை!

- Muthu Kumar
- 22 Apr, 2025
கப்பளா பத்தாஸ், ஏப். 22-
வரும் மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டினால் உண்டாகும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பி.டி.பி.ஆர் எனப்படும் இல்லிருப்பு கற்றல் கற்பித்தலை அமல்படுத்த கல்வி அமைச்சு தயாராக உள்ளது.
இந்த பி.டி.பி.ஆரில் ஈடுபடவுள்ள பள்ளிகளைத் தமது தரப்பு அடையாளம் கண்டு வருவதாக அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்."அது குறித்த கலந்துரையாடப்பட்டது (இல்லிருப்பு கற்றல் கற்பித்தல் அமலாக்கம்). சம்பந்தப்படவிருக்கும் பள்ளிகளை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். ஆசியான் உச்சநிலை மாநாடு சுமுகமாக நடைபெறுவதும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவதும் உறுதி செய்யப்படும்.
எனவே, எவ்வித சிக்கலும் இல்லையெனில் அந்த செயல்முறையை அமல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். நாங்கள் அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்குவோம். அது குறித்து அமைச்சின் மட்டத்திலும் கலந்துரையாடப்படுகிறது", என்றார் அவர்.
அக்காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது உட்பட பி.டி.பி.ஆர் அமலாக்கம் குறித்து அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் முன்வைத்த பரிந்துரை தொடர்பில் ஃபட்லினா அவ்வாறு கூறினார்.
அண்மையில், சீன அதிபர் ஸி ஜின்பெங் மலேசியாவிற்கு மேற்கொண்ட வருகையில் மக்கள்,குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுற்றுவட்டாரத்தினர் எதிர்கொண்ட நெரிசல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து முஹமட் ஹசான் அவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
Kementerian Pendidikan sedia laksana Pengajaran dan Pembelajaran di Rumah (PdPR) semasa Sidang Kemuncak ASEAN pada Mei dan Oktober bagi elak kesesakan lalu lintas. Sekolah terlibat sedang dikenal pasti dan perbincangan sedang dijalankan di peringkat kementerian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *