கெஅடிலான் தேர்தல் முறையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் -நூருல் இஸா நம்பிக்கை!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தாஜம், ஏப். 13-

கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தேர்தல்கள் ஒழுங்குடனும் வெளிப்படையான முறையிலும் நடைபெறும் என்று அதன் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கட்சி தொடர்ந்து வலிமையுடனும் ஒற்றுமையுடனும் இருப்பதை உறுதி செய்வதற்கு இது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தத் தேர்தல் என்பது தலைமையைத் தீர்மானிப்பதற்கான ஒரு செயல்முறை மட்டுமல்ல.மாறாக, கட்சியின் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தி அடிமட்ட ஆதரவை
வலுப்படுத்தும் அதேவேளையில் ஒவ்வொரு உறுப்பினரும் மதிப்புமிக்கவர்களாக உணரும் வகையில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தேர்தல் முறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்குரிய முக்கியமான வாய்ப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.

இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் இந்த அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும். உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் நாம் அனைவரும் ஒரு குடும்ப அமைப்பிற்குள் போட்டியிடுகிறோம் என்று அவர் கூறினார்.

நாங்கள் அனைவரும் பெரிய கெஅடிலான்
குடும்பத்தின் ஒரு பகுதியினர். வெற்றி பெற்றாலும் சரி,வெற்றி பெறாவிட்டாலும் சரி, அல்லது தொகுதி நிலையி தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் சரி, சமூக வலிமையைக் கட்டியெழுப்பவும் அடிமட்ட மட்டத்தில் பிரச்சினைகளைத் தீர்க்கவும் நாங்கள் இன்னும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இஸா கூறினார்.

தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்காளர்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். கெடிலான் கட்சியின் தொகுதி தேர்தல்கள் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். அதே நேரத்தில் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு உள்பட மத்திய தலைமைத் தேர்தல்கள் மே 24 அன்று நடைபெறும்.

Naib Presiden KEADILAN, Nurul Izzah Anwar yakin pemilihan parti akan dijalankan secara telus dan teratur. Beliau menekankan kepentingan perpaduan dan penyertaan ahli dalam memperkukuh kekuatan parti melalui proses demokrasi dalaman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *