முன்பண லாபம் என்ற பெயரில் ரி.ம 666,300ஐ இழந்த தொழிலதிபர்- கூலாயில் போலி பங்குத் திட்ட மோசடி!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

கூலாய், . 20-

ஜொகூர் மாநிலம் கூலாய் மாவட்டத்தில் பெலாபுரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குநர், ரி.ம 6 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ள நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர் ஏ.சி.பி தான் செங் லீ தெரிவித்தார்.

61 வயதான உள்ளூர் தொழிலதிபர் ஒருவர், பங்குத் திட்டம் ஒன்றின் பேரில் குறுகிய நாட்களில் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான லாபத்தை உறுதி செய்யும் என கூறிய ஒரு திட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கிறார். குறித்த திட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், லாப தொகை 'XGIHORIZON செயலியில் சேமிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு நம்பிக்கை கொண்டு, அந்த தொழிலதிபர் மார்ச் 4 முதல் ஏப்ரல் 17, 2025 வரை, 20 முறை மொத்தம் ரி.ம 666,300.00 வரை பணம் செலுத்தியுள்ளார்.அதன் பின்னர் அந்த செயலியில் ரி.ம1.4 மில்லியன் வரை லாபமாக காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை எடுத்துக்கொள்ள முயற்சித்தபோது, மேலும் ரி.ம100,000.00 முதலீடு செய்யுமாறு கூறப்பட்டதையடுத்து, அவர் மோசடியில் சிக்கியதாக உணர்ந்ததாகவும், போலீசில் புகார் அளித்ததாகவும் கூறினார்.இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Seorang pengarah syarikat swasta di Kulai kerugian RM666,300 selepas terpedaya dalam skim pelaburan menjanjikan pulangan cepat. Mangsa membuat 20 transaksi ke aplikasi ‘XGIHORIZON’. Selepas gagal mengeluarkan keuntungan, beliau sedar ditipu dan membuat laporan polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *