புயல் காற்றில் பலத்த சேதமுற்ற பயணிகள் அமரும் பேருந்து கூடாரம்!

- Muthu Kumar
- 16 Apr, 2025
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், ஏப்.16-
அண்மையில் பந்திங் வட்டாரத்தில் கனத்த மழையுடன் வீசிய புயல் காற்றின் காரணமாக அதிகம் பாதித்த இடமாகக் கருதப்படும் பந்திங் பேருந்து நிலைய பயணிகள் அமரும் கூடாரம் மோசமான நிலையில் சேதமுற்று இருப்பதால் அது எப்போது சீரமைக்கப்படும் என்று அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் நேரடிக் கண்காணிப்பில் பந்திங் பேருந்து நிலையம் இருப்பதால் மிக அருகில் இருக்கும் நகராண்மைக் கழகத்தின் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடாரம் சேதமுற்ற சம்பவத்தை நேரில் கண்டறிந்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நேரமில்லையோ? என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பந்திங் வட்டாரத்தில் புதிதாக ஒரு பஸ் நிலையம் கட்டப்படும் என்று மாநில அரசு செயலகம் அறிவித்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்திற்கு அருகில் தற்காலிகமாக பேரளவில் சொல்லக் கூடிய அளவில் கூடாரத்துடன் சிறிய அலுவலகத்தையும் அதே வேளையில் பஸ் நிறுத்தும் இடத்தையும் நகராண்மைக் கழகம் ஏற்படுத்தித் தந்தது.
எனினும், அண்மையில் புயல் காற்றில் சேதமுற்ற பஸ் நிலையக் கூடாரத்தைச் சீரமைத்து தருவதில் மெத்தனப் போக்கு ஏன்? என்று அதன் மேலாளர் பாலு தமது ஆதங்கத்தை வெளி கொணர்ந்தார். இது தொடர் மழைக் காலமாக இருப்பதால் பயணிகளின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நகராண்மைக் கழக அதிகாரிகள் விரைந்து இதற்கொரு தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Kawasan rehat penumpang di stesen bas Baling rosak teruk akibat ribut baru-baru ini. Wakil NGO mempersoal kelewatan pihak berkuasa membaikinya walaupun kerosakan berlaku berhampiran pejabat mereka. Keselamatan dan keselesaan penumpang perlu diutamakan segera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *