தொகுதித் தேர்தலில் தோற்றிருந்தாலும் உதவித் தலைவர் தேர்தலில் வெல்வேன்- நிக் நஸ்மி சூளுரை!

- Muthu Kumar
- 23 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 23-
அடுத்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட் தமது பதவியைத் தற்காக்க மீண்டும் போட்டியிடுகிறார். அதில் வெற்றிபெறுவது உறுதி என்று அவர் நேற்று சூளுரைத்தார்.
செத்தியாவங்சா டிவிஷன் தலைவர் பதவிக்கு அண்மையில் போட்டியிட்ட இயற்கைவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சரான நிக் நஸ்மி. அதில் தோல்வி கண்டார். இருந்தபோதிலும், உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று நிக் நஸ்மி கூறினார்.
பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக நான் ஏற்கெனவே அறிவித்திருக்கிறேன். அந்த முடிவில் மாற்றமில்லை.ஆனால், பெரிய அறிவிப்பு ஏதும் இருக்குமாயின் உங்களிடம்
(செய்தியாளர்கள்) அதனைத் தெரிவிப்பேன் என்று பெட்டாலிங் ஜெயாவில் இக்கியா டாமன்சாரா பேரங்காடியில் சூரிய சக்தி தகடுகளைப் பொருத்தும் பணியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் நிக் நஸ்மி கூறினார்.
செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான நிக் நஸ்மி. அத்தொகுதியின் தலைவர் தேர்தலில் அஃப்லின் ஷாவ்கி என்பவரிடம் தோல்வி கண்டார். அஃப்லினுக்கு 631 வாக்குகள் கிடைத்த வேளையில், நிக் நஸ்மிக்கு 563 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் தொகுதித் தலைவர் பதவியை அவர் பறிகொடுத்தார்.
கட்சித் தேர்தல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் இன்று புதன்கிழமை கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் நிக் நஸ்மி கூறினார்.
Nik Nazmi Nik Ahmad akan bertanding semula jawatan Naib Presiden PKR dalam pemilihan parti hujung bulan depan walaupun kalah dalam pemilihan ketua cabang Setiawangsa. Beliau yakin menang dan akan umumkan sebarang perkembangan besar jika ada kelak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *