11வது மாடியிலிருந்து விழுந்த இளம்பெண் பலி!

top-news

ஏப்ரல் 20,

அடுக்கு மாடிக் குடியிருப்பின் 11வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் 20 வயது உள்ளூர் பெண் உயிரிழந்தார். இன்று மாலை 4.05 மணிக்கு இச்சம்பவம் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாக பினாங்கு வடக்கிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பெண்ணின் வீடு Tanjung Tokong அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது மாடியிலிருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்த நிலையில் அவரின் வீட்டில் சோதனையிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 20 வயது உள்ளூர் பெண் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மேலதிக விவரங்களைக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் தெரிவிப்பதாக பினாங்கு வடக்கிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். உயிரிழந்த இளம்பெண்ணின் உடலில் இதுவரையில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் கண்டறியப்பட்டாத நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் உடலைப் பினாங்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பினாங்கு வடக்கிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.

Seorang wanita tempatan berusia 20 tahun maut selepas terjatuh dari tingkat 11 sebuah pangsapuri di Tanjung Tokong. Polis sedang menjalankan siasatan lanjut dan setakat ini tiada unsur jenayah ditemui. Mayat dihantar ke hospital untuk bedah siasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *