வணிகத்தில் ஈடுப்பட்ட 28 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Apr, 2025
ஏப்ரல் 20,
கெமாமானில் உள்ள வணிகச் சந்தையில் வியாபரம் செய்து வந்த 28 வெளிநாட்டினர்களைத் திரங்கானு குடிநுழைவுத் துறை கைது செய்தது. உள்ளூர் சிறு வணிகர்களுக்காக அரசாங்கம் வழங்கிய வணிகச் சந்தையில் வெளிநாட்டினர்கள் ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாகப் பெறப்பட்ட புகரின் அடிப்படையில் நேற்று காலை 8.30 மணிக்கு இச்சோதனையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகச் சந்தையிலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளில் உள்ள 60 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் 28 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. MYANMAR, BANGLADESH, CAMBODIA, ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 முதல் 46 வயதுக்குற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சுற்றுலா பயணிகள் எனும் அடையாளத்துடன் மலேசியாவுக்குள் நுழைந்து வியாபாரம் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Imigresen Terengganu menahan 28 warga asing berusia 17 hingga 46 tahun kerana menjalankan perniagaan tanpa dokumen sah di pasar Kemaman. Mereka dipercayai menyalahgunakan pas lawatan sosial dan menceroboh kawasan perniagaan khas untuk peniaga tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *