வணிகம் செய்த 12 வெளிநாட்டினர் கைது! – JIM

top-news

ஏப்ரல் 8,

அனுமதியின்றி சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த வெளிநாட்டினர்கள் மீது சோதனையிடும்போது தப்பி ஓட முயன்ற 12 வெளிநாட்டினர்களைக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டினர்கள் வணிகத்தில் ஈடுபடுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்குத் தலைநகரின் Pasar Borong சாலையில் சோதனையை மேற்கொண்டபோது அவர் தப்பி ஓடியதாகவும் பின்னர் காவல்துறையின் உதவியுடன் அவர்களைக் கைது செய்ததாகவும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohamed Saupee Wan Yusoff தெரிவித்தார்.

Bangladesh, Myanmar ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்து மலிவு விலையில் பொருள்களை வணிகம் செய்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிய வந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்களிடம் சோதனையை மேற்கொண்டதாகவும் முறையான ஆவணங்கள் இல்லாது இருந்த 12 வெளிநாட்டினர்கள் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohamed Saupee Wan Yusoff தெரிவித்தார்.

12 warga asing yang terlibat dalam perniagaan haram di Malaysia ditahan oleh Jabatan Imigresen Kuala Lumpur selepas cuba melarikan diri ketika pemeriksaan di Pasar Borong. Mereka dipercayai berasal dari Bangladesh dan Myanmar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *