4 வாகனங்கள் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானரில் முதியவர் பலி!

top-news

ஏப்ரல் 21,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 73 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகவும் விபத்து நிகழ்ந்த Jalan Titi Tinggi சாலைக்கு விரைந்ததாகவும் PADANG BESAR மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shokri Abdullah தெரிவித்தார். கங்காரிலிருந்து பாடாங் பெசார் நோக்கி சென்ற Ford Ranger வாகனம் எதிரில் வந்த 3 வாகனங்களையும் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Mohd Shokri Abdullah தெரிவித்தார்.

விபத்துக்குக் காரணமான 42 வயது Ford Ranger வாகனமோட்டி சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் மற்ற 2 வாகனங்களின் ஓட்டுநர்களும் காயமடைந்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் PADANG BESAR மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shokri Abdullah தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின்னர் 42 வயது Ford Ranger வாகனமோட்டியிடம் விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seorang warga emas berusia 73 tahun maut selepas terlibat dalam kemalangan melibatkan empat kenderaan di Jalan Titi Tinggi. Pemandu Ford Ranger hilang kawalan dan melanggar tiga kenderaan lain. Polis kini menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *