போலி முதலீட்டில் RM 666,300 இழந்த முதியவர்!

- Sangeetha K Loganathan
- 19 Apr, 2025
ஏப்ரல் 19,
அதிக லாபம் பெறும் நோக்கில் முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்த 61 வயது தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார்.
XGIHorizon எனும் செயலியின் மூலமாகக் கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் 20 முறை முதலீடு செய்ததாகவும் மொத்தமாக RM 666,300 ரிங்கிட்டை அவர் இழந்துள்ளதாகவும் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE தெரிவித்தார். நேற்றிரவு பாதிக்கப்பட்டவர் தனது முதலீட்டுப் பணத்தைத் திரும்பப் பெற முயற்சிக்கும் போது மேலும் 1 லட்சம் ரிங்கிட் செலுத்தும்படி கட்டாயப்படுத்தியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் TAN SENG LEE விளக்கமளித்தார்.
Seorang lelaki berusia 61 tahun kerugian RM666,300 akibat menjadi mangsa pelaburan palsu melalui aplikasi XGIHorizon. Mangsa membuat 20 transaksi sejak 4 Mac dan membuat laporan polis selepas dipaksa membayar tambahan RM100,000 untuk mendapatkan semula wang pelaburannya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *