மலேசிய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 மியன்மார் நாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 18 Apr, 2025
ஏப்ரல் 18,
பேராக்கில் உள்ள லுமூட் கடல்பகுதியில் பதிவு எண்கள் இல்லாத மீன்பிடி படகிலிருந்த 5 வெளிநாட்டினர்களைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மீனவர் படகிலிருந்த ஐவரும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும் கடல் பரப்பில் மீன்பிடிப்பதற்கான எந்தவோர் ஆவணங்களையும் அவர்கள் கொண்டிருக்காததால் சம்மந்தப்பட்ட ஐவரையும் MARITIM அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட படகு மியன்மார் எல்லையை விட்டு மலேசிய எல்லைக்குள் சுமார் 7 கிலோ மீட்டருக்கும் மேல் நுழைந்திருப்பதால் படகிலிருந்தவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைய முயற்சித்திருக்கலாம் என நம்பப்படுவதாகப் பேராக் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Mohamad Shukri bin Khotob தெரிவித்தார். சம்மந்தப்பட்ட படகைப் பறிமுதல் செய்ததுடன் மேலதிக விசாரணைக்காக 5 மியன்மார் நாட்டு ஆடவர்களையும் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக Mohamad Shukri bin Khotob தெரிவித்தார்.
Lima warga Myanmar ditahan oleh Agensi Penguatkuasaan Maritim Malaysia di perairan Lumut, Perak kerana menceroboh secara haram sempadan maritim negara menggunakan bot tanpa dokumen sah. Bot itu turut dirampas untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *