தாமான் தீமோர் குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு, காட்டுப் பன்றி-அச்சத்தில் மக்கள்!

- Muthu Kumar
- 20 Apr, 2025
(டிகே.மூர்த்தி)
தெலுக் இந்தான். ஏப். 20-
இங்குள்ள தாமான் தீமோர் (ஈஸ்ட்ரன் கார்டன்) லோரோங் ரியா, E2/9A ஜாலான் சுங்கை, நிபோங் தெலுக் இந்தான் என்னும் குடியிருப்பு பகுதி மத்தியில் காடு போன்று அடர்ந்து இருக்கும் நிலையில் இரவு நேரங்களில் ஆளை விழுங்கும் மலைப் பாம்பு, விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள். கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப் பன்றிகள், மற்றும் பகல் நேரங்களில் உடும்புகள் இவைகள் மக்களை அச்சுறுத்தியும், ஆக்கிரமித்தும் வருகின்றன என்று குடியிருப்பாளர்கள் தங்களின் வேதனையைத் தெரிவித்துள்ளனர்.
தெலுக் இந்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் இந்த காடு காணப்படுகிறது. அங்குதான் இச்சம்பவம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலம் தனியாருக்கு சொந்தமான நிலம் என்று தெரியவந்துள்ளது. இந்த வட்டாரத்தில் சுமார் 2000 பேர் வசிக்கின்றனர். அவர்களில் சீனர்கள் 40 சதவீதம் மலாய்க்காரர்கள் 32 சதவீதம். இந்தியர்கள் 28 சதவீதம் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மக்கள் அச்சத்தோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், மாவட்ட நில அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகம் இணைந்து அந்த காடாக கிடக்கும் வீடமைப்பு நிலம் யாருக்கு சொந்தம் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அதன்படி அந்த நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், வீடமைப்பு மற்றும் ஊராட்சி மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். அந்நிலையில், அவருடைய நாடாளுமன்ற தொகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்து வருவது ஒருவேளை அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால், அப்பகுதி மக்கள் தங்களின் பிரச்சினைக் குறித்த கடிதத்தை அவரிடம் நேரில் ஒப்படைக்கவும் காத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
Penduduk Taman Timur, Teluk Intan resah akibat kehadiran haiwan liar seperti ular, babi hutan dan biawak dari kawasan semak berhampiran. Mereka desak pihak berkuasa ambil tindakan terhadap pemilik tanah terbiar yang ancam keselamatan 2000 penduduk.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *