மலாக்கா மாநில அளவிலான சிலம்ப கலாச்சார போர்க் கலை போருதல் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(வீ.இராஜேந்திரன்)

ஞாலாஸ், ஏப். 21-

கடந்த 19.4.2025ஆம் நாள் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஞாலாஸ் தூன் ஹூவா சீனப்பள்ளி மண்டபத்தில் மலாக்கா மாநில அளவிலான சிலம்ப கலாச்சார போர்க் கலை போருதல் போட்டி நடைபெற்றது.7 முதல் 9 வயது, 10 முதல் 12 வயது, 13 முதல் 15 வயது, 16 முதல் 17 வயது மற்றும் பொது ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே போட்டிகளில் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டியின் அனைத்து பிரிவிலும் 1 முதல் 4 வரை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இப்போட்டியின் இறுதியில் சிறந்த ஆண் வெற்றியாளராக ல.அட்சன் மற்றும் சிறந்த பெண் வெற்றியாளராக ர.வைஷ்ணவி இருவரும் தேர்வு பெற்று கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அசகான் சட்டமன்ற மற்றும் மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பைசுல் நிசாம் அவர்களின் பிரதிநிதி அப்துல் ஹலிம் மஜிட் பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கி வாழ்த்து கூறினார்.காலையில் இறைவாழ்த்து பாடலுக்கு பிறகு இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவர் மஹா ருத்ரவீரன் மஹாகுரு பா.சுரேஷ் வரவேற்பு உரையாற்றினார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்த மலாக்கா மாநில ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் குகன் ராம் சிறப்புரையாற்றினார். இறுதியாக நிகழ்வுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டுக்குழு தலைவர் பா.சுரேஷ் நன்றி கூறினார்.

Pertandingan seni bela diri Silambam peringkat negeri Melaka diadakan pada 19 April 2025 di Sekolah Cina Tun Hwa, Jasin. Peserta pelbagai peringkat umur bertanding. L. Atshan dan R. Vaishnavi dinobatkan sebagai pemenang terbaik. Hadiah disampaikan oleh wakil ADUN Asahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *