இந்திய பாரம்பரிய கபடி உயிரோட்டமாக இருப்பதில்,தமிழ் இளைஞர்களின் பங்கு அளப்பரியது!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு. ஜூன் 17-

தமிழ் இளைஞர்களிடையே பாரம்பரிய கபடி விளையாட்டு உயிரோட்டமாக இருப்பதை அறிந்து நான் வியப்படைகிறேன். தமிழ்நாட்டில் மட்டும் தான் கபடி விளையாட்டு இருக்கிறது என்று நான் நினைத்திருந்தேன். நமது இளைஞர்கள் மத்தியில் இது போன்ற கபடி விளையாட்டை நான் பார்த்தது கிடையாது. பாரம்பரிய கபடி விளையாட்டு நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் பினாங்கு மாநில, வீடமைப்புத் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு.

பாரம்பரிய கபடி விளையாட்டு ஒரு வீர விளையாட்டு. இதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த விளையாட்டில் பயிற்சி பெறுவதால் இளைஞர்கள் மனம், உடல் கட்டமைப்போடு உறுதி பெறுகிறது. இந்த விளையாட்டில் இளைஞர்களோடு இளம் பெண்கள் குழுக்களும் விளையாடுவது கண்டு எனக்குப் பெருமையாக இருக்கிறது.




இந்த கபடி விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பண்பாட்டுக் கழகத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன் என உரையாற்றி கபடிப் போட்டி நிகழ்வை நேற்று காலை அவர் துவக்கி வைத்தார்.

மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தின் இந்தியப் பண்பாட்டுக் குழு ஐந்தாவது ஆண்டாக இந்த பாரம்பரிய கபடி விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இன்று அறிவியல் பல்கலைக்கழகத்தின் அஸ்மான் ஹசிம் அரங்கத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 13 குழுக்கள் பங்கு கொண்டுள்ளன. ஆண்களை உள்ளடக்கிய 8 குழுக்களும் பெண்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்களும் கலந்து கொள்கிறார்கள் என இந்தியப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கிரண் செய்தியாளரிடம் கூறினார்.

மாணவர்கள் இடையே குறிப்பாகப் பாரம்பரிய விளையாட்டுத்துறையை மேம்படுத்தவும் விளையாட்டுத் துறையை இளைஞர்களிடையே வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு பாரம்பரிய கபடிப்
போட்டியை நடத்தி வருகிறோம். ஜொகூர், மலாக்கா, கெடா, கோலாலம்பூர்,சிலாங்கூர், பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களும் போலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஒரு குழுவில் ஏழு முதல் 12 மாணவர்கள் உள்ளனர். மொத்தம் 120 மாணவர்கள் கபடிப் போட்டிகளில் கலந்து
கொண்டுள்ளனர் என்றார் அவர்.

களம்-5 வெற்றியாளர்களாக ஆண்கள் பிரிவில் முதல் நிலை சாம்பியன்யாக உசேன் ஓன் மலேசியப் பல்கலைக்கழகமும், இரண்டாம் நிலையில் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகமும், மூன்றாம் நிலையில் மலாக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும்
வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவில் யூனிவர்சிட்டி உத்தாரா மலேசியாவும் இரண்டாம் நிலையில் பகாங் பல்கலைக்கழகம் மலேசியாவும், மூன்றாம் நிலையில் மலேசிய துன் உசேன் ஓன் பல்கலைக்கழகமும் வெற்றி பெற்றன.

Pertandingan kabbadi tradisional anjuran Kelab Kebudayaan India USM menarik penyertaan 13 pasukan termasuk pelajar universiti dan politeknik dari seluruh Malaysia. Program ini disokong pemimpin negeri dan bertujuan memupuk minat belia terhadap sukan warisan, termasuk penyertaan aktif pelajar perempuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *