ஓ.பி.ஆர் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் கையாள்வதில் பேங்க் நெகாரா விவேகம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப், 27-

தேவை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டிய சக்திவாய்ந்த கொள்கை கருவியாக விவரிக்கப்படும் ஓ.பி.ஆர் எனும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் கையாள்வதில் பேங்க் நெகாரா மலேசியா விவேகமான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றின்போது, ஓ.பி.ஆர் விகிதம் மிகக் குறைவாக அதாவது 1.75 விழுக்காடாக இருந்ததைத் தொடர்ந்து, பணவீக்கத்தைக் கையாள அதன் விகிதத்தை அதிரடியாக உயர்த்திய இதர நாடுகளைக் காட்டிலும், பி.என்.எம் கவனமாகவும் கட்டம் கட்டமாகவும் உயர்த்தும் அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா சுட்டிக்
காட்டினார்.

“பேங்க் நெகாராவும் உயர்த்தியது. ஆனால் அவை கட்டம் கட்டமாக கவனமாக உயர்த்தப்பட்டன. மேலும் அது மூன்று விழுக்காட்டு இணக்கமான விகிதத்தை எட்டியது. இது வணிகம் செய்பவர்கள் இன்னும் வர்த்தகத்தைத் தொடர வசதியாக இருந்தது.ஆனால், சம்பந்தப்பட்ட செயல்முறை முழுவதிலும் சரியான அறிகுறியைக் காட்டியது”, என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் அதிக நிச்சயமற்ற தன்மை, சந்தை ஏற்ற இறக்கம் ஏற்பட்டால் மூன்று விழுக்காட்டு விகிதத்தை நீட்டிப்பதற்கு பி.என்.எம் எடுத்த முடிவு மற்றும் மலேசியாவின் அவசரநிலை செயல் திட்டம் குறித்து அமீர் ஹம்சா கருத்துரைத்தார்.

கடந்தாண்டு 1.8 விழுக்காட்டை எட்டிய மொத்த பணவீக்கம் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் 1.4 விழுக்காடாக குறைந்தது, நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதைக் காட்டுகிறது.

Bank Negara Malaysia (BNM) menguruskan Kadar Dasar Semalaman (OPR) secara berhati-hati, meningkatkan kadar secara berperingkat selepas pandemik COVID-19. OPR kini kekal pada 3% bagi menyokong perniagaan dan kestabilan ekonomi. Inflasi juga menurun daripada 1.8% kepada 1.4% pada Mac 2025.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *