டத்தோ ஹாஜி அப்துல் வாஹாப் இடைநிலைப்பள்ளியின் 59 ஆவது விளையாட்டு, தடகளப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

சுங்கை சிப்புட் ஏப். 29-

இங்கு அமைந்துள்ள டத்தோ ஹாஜி அப்துல் வாஹாப் இடைநிலைப்பள்ளி அளவிலான 59ஆவது ஆண்டாக நேற்று முன்தினம் 27.4.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் தனது பள்ளி மைதானத்தில்
13-18 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் (ஆண்/பெண்) பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியை நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து விளையாட்டுத் துறை குறித்து சிறப்புரையாற்றியுள்ளார்.

அவருடைய உரையில், கல்வியிலும்
பெற்றோர்களின் சார்பிலும் பாராட்டுகிறேன். இந்நிலையில் இந்த விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடையும் அதே வேளையில் இந்த வாய்ப்பினை கொடுத்த இப்பள்ளி முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய சூழ்நிலையில் மழலையர் பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டுப் போட்டிகள் அவர்களுக்கு இதன் மூலம் மாணவர்களின் மத்தியில் ஓட்டத்திறனை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் சிறுவயது முதலே தொடங்கப்படுகிறது. தேர்வின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை உறுதிப்படுத்த முடிகிறது. விளையாட்டு போட்டியில் சிறந்த ஓட்டக்காரர்கள் யார் யார் என்று அடையாளம் காணப்படுகின்றனர்.

அவர்கள் மாவட்டம், மாநிலம், தேசியம், மற்றும் ஆசியான் அளவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றனர். அதன் மூலம் வெற்றிகரமான தடகள வீரர்களாக அனைத்துலக நிலையில் ஜொலிக்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள் 2024 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்துள்ளதற்கு பள்ளி முதல்வரையும் அவரோடு உதவியாசிரியர்களுக்கும் வாழ்த்துகள் கூறுகின்றேன்.

ஒற்றுமை அரசாங்கம் கல்விக்கு பட்ஜெட்டில் (2025) முதன்மை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்நிலையில் மாணவர்களின் வெற்றியில் பெற்றோர்களுக்கும் பங்கு என்பது மிக மிக முக்கியம் என்பதை மறுக்க முடியாது. மாணவர்கள் பள்ளி வகுப்பாசிரியர்கள் கூறும் ஆலோசனையை நன்கு பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை எனக்கூறிய கேசவன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

விளையாட்டு மற்றும் தடகளப் போட்டியினை சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தின் மக்கள் சேவை மையத்தின் ஆதரவுடன் நடத்தியுள்ளனர்.விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவதற்கு அடிப்படையாக மிளிரும் பள்ளி நிர்வாகத்தைப்
ஏற்றபடி நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் ஆரம்பப்பள்ளி முதற்கொண்டு உயர் கல்விக்கூடங்கள் வரையில் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர்.

Program sukan tahunan ke-59 Sekolah Menengah Datuk Haji Abdul Wahab berlangsung 27 April 2025, disertai pelajar 13-18 tahun. Ahli Parlimen Kesavan Subramaniam rasmi membuka acara, tekankan kepentingan sukan dan akademik. Pelajar cemerlang diraikan, sukan disokong kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *