கெடா மாநில கராத்தே கழகத்தின் கராத்தே பொதுப்போட்டி!

- Muthu Kumar
- 13 Apr, 2025
(கே.ஆர். மூர்த்தி)
கூலிம், ஏப்.13-
கெடா மாநில கராத்தே கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கராத்தே பொதுப்போட்டியில் ஜோகூர் மாநிலத்தில் அமைந்துள்ள கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தங்கம் வென்று சாதனை படைத்தனர். அண்மையில் கெடா மாநில கராத்தே கழகம் கூலிம் ஹாய் தேக் பார்க்கில் அமைந்துள்ள துங்கு சுல்தானா பாஹியா பாலிடெக்னிக் கல்லூரியின் முவாட்ஷாம் ஷா அரங்கில் இப்போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்தது.
கெடா மாநில கராத்தே கழகத்தின் துணைத்தலைவரும் ஏற்பாட்டுக்குழு தலைவருமான டத்தோ எம். முனியாண்டி ஏற்பாட்டில் அதன் மாநில தலைவர் மாஸ்டர் கோஷி எஸ். ஸ்டாலின் தலைமையில் இப்போட்டி நடைபெற்றது.
கூலிம் துங்கு சுல்தானா பாஹியா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆதரவோடு நடைபெற்ற இப்போட்டியில் கெடா, பெர்லிஸ். பினாங்கு, பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய ஆறு மாநிலத்தை பிரதிநிதித்து 15 கராத்தே கழகங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள்.
ஜோகூர் மாநில ஓக்கினாவா ஷோரின் ரியோ செபுக்கான் கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் கோஷி ரவி கண்ணியப்பன் தலைமையில் இம்மாநிலத்திலிருந்து 10 போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள். இக்குழுவினர் இப்போட்டியில் 6 தங்கம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு போட்டியில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் திறமைகளை பயன்படுத்தி உள்ளார்கள்.
ஜொகூர் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவி சுவாதி கோபி குமார், ஐந்தாம் ஆண்டு மாணவி ஹாரிமிலா கிரிஸ்டல் ஷர்மா ரவி மற்றும் ஆறாம் ஆண்டு மாணவி ஷர்மிளா மிக்கேலாய ஷர்மா ரவி தங்கம் வென்றனர்.
இதே பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவி ஜீவித்தா ரவிந்திரகுமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஜொகூர் துன் அமினா தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பிரிஹாஸ் காந்தராவ் தங்கப்பதக்கமும், பூலாய் பெர்டானா இடைநிலைப்பள்ளி முதலாம் படிவ மாணவன் தனேஸ்வர் ரவீந்திரகுமார் தங்கப்பதக்கமும் பூலாய் ஜெயா ஜெயா இடைநிலைப்பள்ளி படிவம் இரண்டு மாணவன் டோனியல் சுவாஹார் ஷர்மா ரவி தங்கப்பதக்கமும் வென்றார்கள்.
மேலும் ஸ்ரீ தென்பி பள்ளியைச் சேர்ந்த சிவன் விக்னேஸ்வரன் வெள்ளிப்பதக்கமும் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி முதலாம் ஆண்டு மாணவி கேஷிக்கா தேவராஜ் மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் ஆக்காஷ் தேவராஜ் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இப்போட்டியை வெற்றிகரமாக சிறப்பான முறையில் நடத்தி முடித்த கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் கோஷி எஸ். ஸ்டாலின் அவர்தம் செயலவையினருக்கு மாஸ்டர் ரவி கண்ணியப்பன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
Dalam kejohanan karate peringkat negeri Kedah, murid-murid dari SJKT Kangkar Pulai Johor memenangi beberapa pingat emas, perak dan gangsa. Lebih 400 peserta dari enam negeri bertanding dalam kejohanan yang dianjurkan dengan jayanya oleh Persatuan Karate Negeri Kedah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *